Last Updated : 09 Jul, 2015 04:59 PM

 

Published : 09 Jul 2015 04:59 PM
Last Updated : 09 Jul 2015 04:59 PM

2016 ஜனவரியில் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது: 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் அந்த அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தத் தொடரில் 3 டி20 சர்வதேச போட்டிகளும் அடங்கும்.

2015 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏமாற்றத் தோல்வியைத் தழுவியதையடுத்து ஆஸ்திரேலியாவை மீண்டும் ஜனவரியில் அவர்கள் சொந்த மண்ணில் சந்திக்கிறது இந்திய அணி.

நியூஸிலாந்து மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிராக தலா 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலியா அதற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது.

ஜனவரி 12-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் தொடங்குகிறது.

ஒருநாள் போட்டிகள் விவரம் வருமாறு:

ஜனவரி 12, முதல் ஒருநாள் போட்டி - பெர்த்

ஜனவரி 15, 2-வது ஒருநாள் போட்டி - பிரிஸ்பன்

ஜனவரி 17, 3-வது ஒருநாள் போட்டி- மெல்போர்ன்

ஜனவரி 20, 4-வது ஒருநாள் போட்டி - கான்பரா

ஜனவரி 23, 5-வது ஒருநாள் போட்டி - சிட்னி

டி20 தொடர்:

முதல் போட்டி ஜனவரி 26- அடிலெய்ட்

2-வது போட்டி ஜனவரி 29- மெல்போர்ன்

3-வது போட்டி ஜனவரி 31, சிட்னி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x