

2-வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கால்பந்துக்கு பெயர் பெற்ற கோவாவில் டிசம்பர் 20-ம் தேதி நடக்கிறது என ஐஎஸ்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழா சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணியும், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன. மொத்தம் 56 ஆட்டங்கள் நடக்கின்றன.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் பிரபலமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.