

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 114.3 ஓவர்களில் 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்த 4 நாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் கே.எல்.ராகுல் 96, புஜாரா 55, ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்கள் சேர்க்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 77.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. சங்கர் 4 ரன்களுடனும், மிஸ்ரா ரன் ஏது மின்றியும் களத்தில் இருந்தனர்.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் மிஸ்ரா 27 ரன்களில் ஆட்டமிழந்தாலும், தமிழக வீரரான சங்கர் அரைசதம் கண்டார். பின்னர் வந்த மிதுன் 0, உமேஷ் யாதவ் 1, பிரக்யான் ஓஜா 2 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 114.3 ஓவர்களில் 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. சங்கர் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான பான்கிராப் 2, டிராவிஸ் ஹெட் 31, கவாஜா 25 ரன்களிலும், மேடின்சன் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். எனினும் மறுமுனையில் அசத்த லாக ஆடிய ஹேன்ட்ஸ்காம்ப் அரைசதம் கண்டார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரே லியா 58 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியத் தரப்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட்டுகளையும், மிதுன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட ஆஸ்திரேலியா இன்னும் 116 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.