

கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டி யில் வென்றுள்ள பிறகாவது, அரசு எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வோம் என பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜுவாலா கட்டா கூறியதாவது:
முன்னணி வீராங்கனைகளுக்கு கிடைக்கும் அனைத்து ஆதரவும் எங்களுக்கு தேவை. ஒற்றையர் பிரிவில் ஆடுபவர்களுக்கு அதுபோன்ற ஆதரவு கிடைக்கிறது. அதைப்போன்ற ஆதரவு எங்களுக்குக் கிடைத்தால் நானும் அஸ்வினி பொன்னப்பாவும் அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வோம்.
உரிய அதிகாரம் பெற்ற வர்கள் என்ன செய்துகொண்டி ருக்கிறார்கள் என எனக்குத் தெரியாது. தற்போதாவது எங்க ளைப் பற்றிச் சிந்திப்பார்கள் என நம்புகிறேன். ஒரு வீராங்கனையாக நான் எனது விளையாட்டைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன்.
இவற்றுக்குப் பதிலாக டெல்லி சென்று 2, 3 நாட்கள் தங்கி எங்களுக்கு அரசின் ஆதரவைத் திரட்டிக் கொண்டிருக்க முடியாது. ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு மிகச்சிறந்த இணை நாங்கள். கனடா ஓபன் போட்டியில் வென்றுள்ளோம். இதற்குப் பிறகாவது மக்களும், விளையாட்டுத் துறை அமைச்ச கமும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதுதான் எங்களுக்குத் தேவை.நாங்கள் அரசை சார்ந்து இருக்கிறோம். இவ்வாறு, ஜுவாலா கட்டா தெரிவித்தார்.