குரேஷிய ஓபன்: 2-வது சுற்றில் கோல்ஸ்கிரைபர்

குரேஷிய ஓபன்: 2-வது சுற்றில் கோல்ஸ்கிரைபர்
Updated on
1 min read

குரேஷியாவின் உமாக் நகரில் நடைபெற்று வரும் குரேஷிய ஓபன் டென்னிஸ் போட்டியில் குரேஷியாவின் போர்னா கோரிச், ஜெர்மனியின் கோல்ஸ்கிரைபர் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

போர்னா கோரிச் தனது முதல் சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸை தோற்கடித்தார். கடும் வெயிலுக்கு மத்தியிலும் அசத்தலாக ஆடிய கோரிச், அடுத்ததாக பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேனை சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பிலிப் கோல்ஸ்கிரைபர் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் கொலம்பியாவின் சான்டியாகோ கிரால்டோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in