Published : 08 May 2014 10:00 AM
Last Updated : 08 May 2014 10:00 AM

ஐபிஎல்-லில் இப்போதுவரை மேட்ச் பிக்ஸிங் இல்லை: ராகுல் திராவிட் மகிழ்ச்சி

இப்போது நடைபெற்று வரும் 7-வது ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்ஸிங், சூதாட்டம் போன்ற சர்ச்சைகள் ஏற்படாமல் இருப்பது குறித்து ராகுல் திராவிட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல்-லில் திராவிட் கேப்டனாக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 3 பேர் மேட்ச் பிக்ஸிங்கில் சிக்கினர். இந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக திராவிட் உள்ளார்.

ஆமதாபாதில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருப்பது: ஐபிஎல் போட்டிகள் இது வரை எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் நடைபெற்று வருவது சிறப்பானது. சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விவகாரங்களில் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எனெனில் கிரிக்கெட்டை கெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர் என்று திராவிட் கூறினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் வாட்சன், தலைமை பயிற்சி யாளர் பாண்டே ஆகியோரும் அப்போது உடனிருந்தனர். இந்த ஐபிஎல்-லில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு போட்டி கூட நடைபெற வில்லை. ராஜஸ்தான் அணியின் உள்ளூர் மைதானமாக ஆமதாபாத் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய திராவிட், ஆமதாபாத் எப்போது ராஜஸ்தான் அணிக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது. இங்குள்ள ரசிகர்கள் எங்களை அவர்கள் அணியாக ஏற்றுக் கொள்வார்கள். நம்மிடம் பல திறமையான வீரர்கள் அடை யாளம் காணப்படாமல் உள்ளார்கள். கொல்கத்தா அணிக்கு எதிராக ஹைட்ரிக் விக்கெட் எடுத்த பிரவீன் தாம்பே மிகச் சிறந்த வீரர். 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் விளையாடி வருகிறார். அவரது கடின உழைப்பே 42 வயதிலும் அவரை நிலைநிறுத்தியுள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான திறமையான வீரர்கள் உள்ளார்கள் என்ப தற்கு அவர் உதாரணம் என்றார் திராவிட்.

வாட்சன் பேசுகையில், ஐபிஎல் மூலம் ராகுல் திராவிட் போன்ற சிறந்த வீரர்களிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். எனக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது கூடுதல் மகிழ்ச்சியளிக் கிறது என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x