

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைக்காததால் அந்தப்போட்டி உடனடியாக கைவிடப்பட்டுள் ளதாக சாம்பியன்ஸ் லீக் ஆட்சி மன்றக் குழு அறிவித்துள்ளது. அதனால் இந்த ஆண்டு சாம்பி யன்ஸ் லீக் போட்டி நடைபெறாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு தொடங்கப் பட்ட ஐபிஎல் போட்டிக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, பிசிசிஐ, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆகியவை இணைந்து 2009-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியை தொடங்கின. ஆனால் வரவேற்பு இல்லாததன் காரணமாக 6 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்தப் போட்டி இப்போது நிறுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐபிஎல், பிக் பாஷ் லீக், ராம் ஸ்லாம் டி20 உட்பட உலகம் முழுவதி லும் உள்ள டி20 போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகள் பங்கேற்கும் சவால் நிறைந்த போட்டியாக சாம்பியன்ஸ் லீக் இருந்தது. அந்தப் போட்டியை கைவிடுவது என்பது கடினமான முடிவுதான்.
கடந்த 6 ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் உள்ள வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல அடித்தள மாக இந்தப் போட்டி இருந்தது. ஆனால் நாங்கள் நம்பிய அளவுக்கு இந்தப் போட்டி ரசிகர் களிடம் வரவேற்பை பெறாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.
வர்த்தக பங்குதாரர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கலந்தா லோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்ற அனை வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக் கப்பட்டுள்ளது.