தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லும் இந்தியா சிமெண்ட்ஸ்

தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லும் இந்தியா சிமெண்ட்ஸ்
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டதை எதிர்த்து அணி உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.

லோதா கமிட்டி பரிந்துரைகளின் மீது விவாதம் மேற்கொண்டதாகவும் இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதிகள் லோதா, அசோக் பான், ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய கமிட்டி இன்று ஐபிஎல் முறைகேடுகள் குறித்த தனது தீர்ப்பில் சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை தடை செய்து தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பு அறிக்கையில், “தனிநபர்களை விட அல்லது தனிநபர்கள் அடங்கிய அமைப்பை விட கிரிக்கெட் ஆட்டம்தான் பெரிது என்பதை ஏற்றுக் கொண்ட பிறகே, சில தனிப்பட்ட வீரர்கள் மற்றும் அணி உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அல்லது தவறான செயல்களுக்கு தண்டனை அளிப்பதை பரிசீலிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத இடமில்லை.

நாட்டின் ஒரு முக்கியமான விளையாட்டை நிர்வகித்து வரும் பிசிசிஐ ஒழுங்குக்கு ஒரு முக்கிய இடம் அளித்திருக்க வேண்டும். எனவே ஆட்டத்தின் தூய்மை என்பதே மையக்கூறாகும்”என்று கூறி ராஜஸ்தான், சென்னை அணிகளை தடை செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in