ஏ.எச்.எப். கமிட்டியில் 3 இந்தியர்கள்

ஏ.எச்.எப். கமிட்டியில் 3 இந்தியர்கள்
Updated on
1 min read

ஆசிய ஹாக்கி சம்மேளன (ஏ.எச்.எப்.) கமிட்டியில் இந்தியாவைச் (ஹாக்கி இந்தியா) சேர்ந்த மேரியம்மா கோஷி, ஆர்.பி.சிங், எலீனா நார்மன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கோஷி, மகளிர் கமிட்டியில் இடம்பெற்றுள்ளார். ஆர்.பி.சிங், நார்மன் ஆகியோர் போட்டி ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

இது தொடர்பாக ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் முகமது முஷ்டாக் அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலிருந்து 3 பேர் ஆசிய ஹாக்கி சம்மேளன கமிட்டியில் சேர்க்கப்பட்டிருப்பதால் ஹாக்கி இந்தியா பெருமிதம் அடைகிறது.

ஆசிய ஹாக்கியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதுதான் ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் தற்போதைய இலக்கு. புதிய உறுப்பினர்கள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி நம்மை பெருமையடையச் செய்வார்கள் என நம்புகிறேன். புதிய உறுப்பினர்களுக்கு ஹாக்கி இந்தியா சார்பில் வாழ்த்துகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஹாக்கி வீராங்கனையான மேரியம்மா கோஷி, தற்போது ஹாக்கி இந்தியாவின் மூத்த துணைத் தலைவராக இருக்கிறார். ஆர்.பி.சிங், 1986, 1990 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர். தற்போதைய தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார். நார்மன், ஹாக்கி இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in