எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: சென்னையில் இன்று தொடக்கம்

எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: சென்னையில் இன்று தொடக்கம்
Updated on
1 min read

89-வது எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

26-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த இஐடி பாரி இந்தியா நிறுவனத்தின் தலைவர் அருண் முருகப்பன் கூறியதாவது:

89-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகை இந்த ஆண்டு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு ரூ.2.5 லட்சம் ரொக்கப் பரிசாக கிடைத்தன. இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு கிடைக்கும். இதற்கு முன்னர் 2-வது இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ.1.5 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.2.5 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

இதுதவிர சிறந்த வீரர், சிறந்த முன்கள வீரர், சிறந்த கோல் கீப்பர்/பின்கள வீரர், இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்பவர் உள்ளிட்டோருக்கு தலா ரூ.10 ஆயிரமும், உயர் ரக சைக்கிளும் வழங்கப்படவுள்ளது” என்றார்.

தினந்தோறும் இரண்டு முதல் 3 போட்டிகள் வரை நடைபெற வுள்ளன. தினந்தோறும் மாலை 6 மணிக்கு தொடங்கும் போட்டி மின்னொளியில் நடைபெறும். இந்தப் போட்டி லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறு கிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகள் 25-ம் தேதி நடைபெறுகின்றன. ஜூலை 26-ல் நடைபெறும் இறுதிப் போட்டி தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

முதல் நாளான இன்று இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பிய னான இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் (ஐஓசி) அணியும், கர்நாடக ஹாக்கி அணியும் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், ராணுவ லெவன் அணியும் மோத வுள்ளன.

இன்றைய ஆட்டங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- கர்நாடக ஹாக்கி

நேரம்: மாலை 4.15

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- ராணுவ லெவன்

நேரம்: மாலை 6

போட்டியில் பங்கேற்கும் அணிகள்

ஏ பிரிவு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

கர்நாடக ஹாக்கி

சிஏஜி (இந்திய தணிக்கைத் துறை)

மும்பை ஹாக்கி

நம்தாரி லெவன்

பி பிரிவு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி

ராணுவ வெலன்

இந்திய எஃகு ஆணையம்

இந்திய ரயில்வே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in