பெனால்டியை கோலாக மாற்றுவதில் முன்னேறியிருக்கிறோம்: இந்திய ஹாக்கி பயிற்சியாளர் மகிழ்ச்சி

பெனால்டியை கோலாக மாற்றுவதில் முன்னேறியிருக்கிறோம்: இந்திய ஹாக்கி பயிற்சியாளர் மகிழ்ச்சி
Updated on
2 min read

பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் முன்னேறியுள்ளோம் என இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வான் ஏஸ் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் போட்டி யில் இந்திய ஆடவர் அணி அரை யிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதிப் போட்டியில் மலேசி யாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஆட்டத்தின் முதல் கோலை இந்தியாவின் சத்பிர் சிங் அடித்தார். ஆனால், மலேசியா இரு பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றி யதால், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியது.

கடைசி 15 நிமிடத்தில் இந்திய அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஜஸ்ஜித் சிங் கோலாக மாற்றினார். அதைப்போலவே 56-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் அவர் அற்புதமாக கோலாக மாற்ற, இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இது இந்திய அணிக்கு புத்தெழுச்சியை ஊட்டியுள்ளது. அண்மையில்தான் ஹாக்கி அணி யின் பயிற்சியாளராக பால் வான் ஏஸ் பொறுப்பேற்றார். அவர் சில புதுமையான முயற்சிகளை முன்னெடுத்தார். அதற்கான பலன் தற்போது கிடைத்து வருகிறது.

குறிப்பாக, பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வி.ஆர். ரகுநாத்தும், ரூபிந்தர் பால் சிங்கும்தான் அடிப்பர். ஆனால், ஒலிம்பிக் போட்டிக் குத் தயாராகும் விதத்தில் இதில் மாற்றம் கொண்டு வந்தார் வான் ஏஸ். மேற்கண்ட இருவரும் இல்லாத சமயத்தில் பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றுவதற்காக மாற்று வீரர்க ளைத் தயார் செய்தார். அந்த அடிப் படையில் விளையாடிய ஜஸ்ஜித் சிங்தான் தற்போது 2 பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றி, அணியை அரையிறுதிக்கு அழைத் துச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக வான் ஏஸ் கூறும்போது,“ நம்மிடம் இப்போது மாற்றுத் திட்டங்கள் உள்ளன. களத்தில் ஜஸ்ஜித் கடுமையாக உழைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. பெனால்டி கார்னரைக் கையாள் வதற்கு அதிக வீரர்கள் இருப்பது மிக நல்ல விஷயம். மலேசியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை, பெனால்டி கார்னரில் நாம் தேர்ந்தவர்கள் இல்லை. ஆனால், இப்போட்டியில் சரியாக வெளிப் பட்டிருக்கிறோம்” என்றார்.

ஹாக்கி லீக் போட்டியின் போது, ருபிந்தருக்கு ஓய்வளிக்கப் பட்டிருந்ததால், ரகுநாத்தான் பெனால்டி வாய்ப்பைக் கையாள்வ தாக இருந்தது. அவருக்கு பக்க பலமாக ஜஸ்ஜித் இருப்பார். ஆனால், பயிற்சிப் போட்டியில் ருபிந்தர் காயமடைந்தார். முந்தைய போட்டிகளிலும் அவர் சோபிக்கவில்லை. அணித் தேர்வின்போது, ரகுநாத் சேர்க்கப் பட்டார்.

மலேசியாவுக்கு எதிரான போட்டி யின்போது, பெனால்டி வாய்ப்புகள் கோலாக மாற்றப்படவில்லை. நான்காவது பெனால்டி வாய்ப்பு 48-வது நிமிடத்தில் வந்த போது, ஜஸ்ஜித் சிங் அதனை கோலாக மாற்றினார். அதன்பின் 7 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டு மொரு வாய்ப்பு வந்தது. அதனை யும் டிராக்-பிளிக் செய்து கோலாக மாற்றினார் ஜஸ்ஜித் சிங்.

“சர்வதேச போட்டிகளில் இந்த இரு கோல்களும்தான் நான் முதன் முதலில் டிராக்-பிளிக் முறையில் அடித்த கோல்கள்” என ஜஸ்ஜித் சிங் தெரிவித்துள்ளார். ஜஸ்ஜித் சிங்கின் முதல் சர்வதேச கோலும் மலேசியாவுக்கு எதிராகத்தான் கிடைத்தது. கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டி யின்போது அதனை அடித்தார் ஜஸ்ஜித் சிங்.

மகளிர் அணி வெற்றி

உலக ஹாக்கி லீக் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய மகளிர் அணி ஏற்கெனவே இழந்துவிட்டது. இந்நிலையில் 5 முதல் 8-வது இடங் களுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இத்தாலியை இந்தியா வீழ்த்தியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதிலும் இரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்தன. எனவே, சடன் டெத் முறை பின்பற்றப்பட்டது. இதில், இந்தியாவின் ராணி ஒரு கோல் அடித்தார். இத்தாலியின் முயற்சியை இந்திய கீப்பர் சவிதா தடுத்ததால், இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in