

கடந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுலுக்கு இந்தப் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவ ருக்குப் பதிலாக நான் தொடக்க வீரராக களமிறங்குகிறேன் என இந்திய ஏ அணியின் கேப்டன் புஜாரா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இலங்கைக்கு தொடருக்கு முன்னதாக பயிற்சிப் போட்டியில் விளையாட விரும்பியதால் இந்தப் போட்டியில் விராட் கோலி களமிறங்குகிறார். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே நான் கேப்டனாக நியமிக்கப்பட்டேன். அதன்படி 2-வது போட்டியிலும் நானே கேப்டனாக தொடர்கிறேன்.
இந்திய ஏ அணிக்காக விளையாடினாலும் சரி, இந்திய அணிக்காக விளையாடினாலும் சரி ரன் குவிப்பது முக்கியமானதாகும். 2-வது போட்டி எப்படி போகும் என்பது குறித்து விராட் கோலி யுடன் ஆலோசித்தோம். விராட் கோலி இந்தப் போட்டியில் விளை யாடுவது எனக்கு மட்டுமின்றி அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் பயனுள்ளதாகும்.
இளம் வீரர்கள் அவரு டன் கலந்துரையாடி நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள் ளலாம். விராட் கோலியும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். அவர் போட்டிக்கு எப்படி தன்னை தயார்படுத்திக் கொள்கிறார் என்பதை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள் ளலாம். அது இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
இந்திய சீனியர் அணியில் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பதில் தீவிரமாக இருக்கும் புஜாரா, எந்த நிலையிலும் தன்னால் விளையாட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.
இதற்கு முன்னர் 2013-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடியபோது புஜாரா தொடக்க வீரராக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாமின் புத்தகத்தால் உத்வேகம் பெற்றேன்
நேற்று முன்தினம் ஷில்லாங்கில் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேசிய புஜாரா, “கலாம் எழுதிய இந்தியா 2020 என்ற புத்தகத்தைப் படித்து உத்வேகம் பெற்றேன். அவர் உத்வேகமிக்க நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதில் எனக்குப் பிடித்தது இந்தியா 2020 என்ற புத்தகம். அவர் மிகப்பெரிய அறிவுப்பூர்வமான விஷயங்களை இந்த நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் கொடுத்தவர். அவருடைய ஆன்மா அமைதியில் திளைக்கட்டும்” என்றார்.
2-வது போட்டி எப்படி போகும் என்பது குறித்து கோலியுடன் ஆலோசித்தோம். விராட் கோலி இந்தப் போட்டியில் விளையாடுவது எனக்கு மட்டுமின்றி அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் பயனுள்ளதாகும்.