

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் தங்க மங்கை என வர்ணிக்கப்படும் ஈகுனி பவுச்சார்டு அதிர்ச்சித் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டி வரை முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய பவுச்சார்டு சீனாவின் டுவான் யிங்- யிங்கை எதிர் கொண்டார். உலக தரநிலையில் 117 நிலையிலுள்ள யிங்- யிங்கை, போட்டித் தரவரிசையில் 12-வது இடத்திலுள்ள பவுச்சார்டு எளிதில் வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் செட்டே மிகவும் கடினமாக அமைந்தது. கடினமாக போராடிய போதும் முதல் செட்டை 7-6 (7/3) என்ற கணக்கில் இழந்தார் பவுச்சார்டு . இரண்டாவது செட்டை 6-4 என எளிதில் கைப்பற்றிய யிங் யிங், பவுச்சார்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதுதொடர்பாகக் கூறிய பவுச்சார்டு, “நான் போட்டிக்கு தயாராகவில்லை. ஆனால் என்ன நடந்தாலும் சரி என விளையாட விரும்பினேன். விம்பிள்டனைத் தவிர்க்கத் தயாராக இல்லை. எனவே குறைந்த பயிற்சி எடுத்து விளையாடினேன். சிறிது காலத்துக்கு உடலுக்கும் மனதுக்கும் ஓய்வளித்து விட்டு பிறகு மீண்டும் திரும்புவேன். டென்னிஸ் விளையாடாமல் இருப்பது என்பது கடினமானது. நல்ல பயிற்சியாளரைத் தேடுவேன். கடந்த சில மாதங்கள் எனக்கு கடினமானவை.” என்றார்.
இதைக் கூறும்போது அவர் கண் கலங்கினார்.
விலகினார் நிஷிகோரி
போட்டித் தரவரிசையில் 5-வது இடத்திலுள்ள நிஷிகோரி, ஆடுதசைக் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். 2-வது சுற்றில் அவர் கொலம்பி யாவின் கிரால்டோவைச் சந்திக்கவி ருந்தார்.
2-வது சுற்றில், ஆடவர் பிரிவில் பின்லாந்தின் நிமெனனை, செர்பியாவின் ஜோகோவிச் 6-4, 6-2, 6-3 என்ற செட்களில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும், பல்கேரியாவின் திமித் ரோவ், பெல்ஜியத்தின் காபின், ஆஸ்திரேலியாவின் டாமிக், பிரான்ஸின் காஸ்குட் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பயஸ் ஜோடி
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ், கனடாவின் நெஸ்டர் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் பூரவ் ராஜா பிரான்சின் மார்டின் ஜோடி முதல் சுற்றில் தோற்று வெளியேறியது.
மகளிர் ஒற்றையர், அமெரிக் காவின் கெய்ஸ், ஜெர்மனியின் கெர்பர், ரஷ்யாவின் குஸ்நெட் சோவா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ஆஸ்திரேலி யாவின் ஸ்டோசுர், அமெரிக்காவின் வான்டேவேகே, மரியா ஷரபோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.