எம்.சி.சி.-முருகப்பா ஹாக்கி: ஐஓசி, நம்தாரி அணிகள் வெற்றி

எம்.சி.சி.-முருகப்பா ஹாக்கி: ஐஓசி, நம்தாரி அணிகள் வெற்றி
Updated on
1 min read

சென்னையில் நடைபெற்று வரும் 89-வது எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), நம்தாரி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஐஓசி அணி 4-3 என்ற கோல் கணக்கில் சிஏஜி அணியைத் தோற்கடித்தது.

ஐஓசி அணியின் 4 கோல்களையும் தீபக் தாக்குர் அடித்தார். சிஏஜி தரப்பில் நயீமுதீன் 2 கோல்களையும், மகேந்திர குமாவத் ஒரு கோலையும் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் நம்தாரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை ஹாக்கி அணியைத் தோற்கடித்தது. லீக் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தன.

ஏ பிரிவில் இருந்து ஐஓசி (10 புள்ளிகள்), சிஏஜி (7 புள்ளி கள்) ஆகிய அணிகள் அரை யிறுதிக்கு முன்னேறியுள்ளன. பி பிரிவில் இருந்து ராணுவ லெவன் (10 புள்ளிகள்), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி (10 புள்ளிகள்) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் ஐஓசி அணி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியுடன் மோதுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதியில் ராணுவ லெவன் அணியும், சிஏஜி அணியும் மோதுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in