

பிரிட்டனைச் சேர்ந்த் சூதாட்ட இணையதளத்துக்கு (www.betfair.com) இந்தியாவில் இருந்து ரூ.1.9 லட்சம் கோடி அளவுக்கு சூதாட்ட பணம் அனுப்பப்பட்டிருப்பதை ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாகப்பிரிவு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.
ரூ.1.9 லட்சம் கோடி என்பது டெல்லி அரசின் பட்ஜெட்டைவிட 5 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 1 கோடி பேர், பிரிட்டன் சூதாட்ட இணையதளத்தில் ‘லாக்இன்’ செய்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த அமலாக்கப் பிரிவு இயக்குனரக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமலாக்கப் பிரிவு இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விசாரணையின்படி எங்களுக்கு கிடைத்த தகவல் இது. உண்மையை சொல்வதானால் இந்தியாவில் இருந்து மிகப்பெரிய தொகை அனுப்பப்பட்டிருக்கலாம். பிரிட்டன் இணையதளத்தை இந்தியாவில் செயல்படவிடாமல் 3 மாதங்களுக்குள் முடக்க வேண்டும் என 2010-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை அந்த இணையதளம் இந்தியாவில் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது.
அதில் அக்கவுண்ட் வைத்திருக்கும் சூதாட்டத் தரகர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் அதை கையாள லாம். அதனால் அவர்களை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாகும்.
பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சூதாட்டம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் சூதாட்டத் தரகர்களோ அல்லது அவர்களுடைய ஆட்களோ வெளி நாடுகளில் இருந்து கொண்டு பணபரிவர்த்தனையில் ஈடுபடலாம். இந்தியாவில் இருந்து இந்திய பணத்தைப் பெற்றுக்கொண்டு அதை டாலராக மாற்றி இணைய தளத்தில் செலுத்தலாம். இதன்மூலம் பெரிய அளவிலான தொகை இந்தியாவில் இருந்து வெளியே சென்றுள்ளது.
கிரிக்கெட் சீசன் தொடங்கும் போது முக்கிய சூதாட்டக்காரர்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர். அவர்கள் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்களின் அக்கவுண்ட்களை நிர்வகிக்கின்றனர்.
சூதாட்டத் தரகர்கள் சூப்பர் மாஸ்டர் என்ற அக்கவுண்டை தொடங்குகிறார்கள். அதன்மூல மாக 10 மாஸ்டர் அக்கவுண்ட்டுகளை கையாள்கிறார்கள். ஒவ்வொரு மாஸ்டர் அக்கவுண்ட் மூலமா கவும் 300 ‘லாக்இன்’களை தொடங்கலாம்.
சூப்பர் மாஸ்டர் அக்கவுண்ட் வைத்திருக்கும் சூதாட்டக்காரர்கள் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தங்களுடைய கூட்டாளிகளுக்கு மாஸ்டர் அக்க வுண்ட்களை அளிப்பார்கள். அவர்கள் சிறிய சூதாட்டக் காரர்களுக்கு ‘சப்-லாக்இன்’ வழங்குவார்கள். இப்படித்தான் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பெரும் தொகை கிடைக்கிறது என்றார்.