

டோக்கியாவில் நடைபெற்று வரும் உலகடேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதியில் தோல்வி கண்டு வெளியேறியது.
சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் பிரேசிலி டம் தோல்வி கண்டது. குரூப் சுற்றில் இந்திய வீராங் கனைகள் அபாரமாக ஆடிய தால் காலிறுதியிலும் சிறப் பாக ஆடுவார்கள் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பிரேசில் அணியிடம் இந்தியா வின் ஆட்டம் எடுபடவில்லை.
இந்திய வீராங்கனைகளில் மணிக்கா பத்ரா மட்டுமே சிறப்பாக ஆடினார். அவர் 13-11, 7-11, 11-4, 12-10 என்ற கணக்கில் லிஜியா சில்வாவைத் தோற் கடித்தார். அதேநேரத்தில் கே.ஷாமினி 8-11, 11-7, 5-11, 11-9, 7-11 என்ற கணக்கில் குய் லின்னிட மும், அங்கிதா 4-11, 8-11, 11-7, 6-11 என்ற கணக்கில் கரோலின் குமஹராவிடமும் தோல்வி கண்டனர். பின்னர் நடைபெற்ற “ரிவர்ஸ் சிங்கிள்” ஆட்டத்தில் மணிக்கா பத்ரா 12-14, 7-11, 12-10, 5-11 என்ற கணக்கில் பிரேசிலின் முதல் நிலை வீராங்கனை யான குய் லின்னிடம் தோல்வி கண்டார்.