

மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா ஆகியோரின் பெயரில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே இரு நாடுகளிலும் கிரிக்கெட் தொடர் நடத்துவதற்காக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அடுத்த இரண்டு ஆடுகளுக்குள் நிச்சயம் இந்தத் தொடர் நடத்தப்படும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் (சிஎஸ்ஏ) தலைமைச் செயல் அதிகாரி ஹாரூன் லோர்கட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டியில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அனைத்துவிதமான போட்டிகளுக்கான புதிய சீருடையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோர்கட் மேலும் கூறியதாவது:
காந்தி-மண்டேலா பெயரில் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மிகுந்த வரவேற்புஅளித்துள்ளது. நாங்கள் இந்தியாவுக்கு சென்று 4 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் விளையாடுவோம். இந்திய அணியினர் 2018-ல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள். அந்தத் தொடருக்கான பணிகளில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்றார்.