

வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், அணியின் துணைப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் தொடருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாம்ப்வே தொடர் தொடங்கவுள்ள ஜூலை மாதத்துக்குள்ளாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழு நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக, இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அப்போதே பாங்கர், அருண், ஸ்ரீதர் ஆகியோர் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டனர். அவர்களது நியமனம் உலகக் கோப்பை 2015 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.