Published : 07 Jun 2015 12:10 PM
Last Updated : 07 Jun 2015 12:10 PM

அகில இந்திய பால் பாட்மிண்டன்: செயின்ட் ஜோசப், ரயில்வே அணிகள் வெற்றி

7-வது செயின்ட் ஜோசப் டிராபிக்கான அகில இந்திய பால் பாட்மிண்டன் போட்டி சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது.

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் ஜோசப் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி சார்பில் 3 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி, லீக் மற்றும் சூப்பர் லீக் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

முதல் நாளான நேற்று நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டங்களில் மேற்கு ரயில்வே அணி 29-23, 29-14 என்ற கணக்கில் செயின்ட் ஜோசப் ‘பி’ அணியையும், தெற்கு மத்திய ரயில்வே அணி 29-18, 29-14 என்ற செட் கணக்கில் ஜே.ஜே.கிளப் அணியையும் தோற்கடித்தன.

பி பிரிவு ஆட்டங்களில் தெற்கு ரயில்வே ‘பி’ அணி 29-27, 29-24 என்ற கணக்கில் ஹைதராபாத் ஹத்வே அணியையும், ஐசிஎப் அணி 29-15, 29-15 என்ற கணக்கில் அசோக் நகர் அணியையும் தோற்கடித்தன.

சி பிரிவு ஆட்டங்களில் தெற்கு ரயில்வே ‘ஏ’ அணி 29-14, 29-16 என்ற கணக்கில் மீடியா விஷன் ‘பி’ அணியையும், தென் கிழக்கு ரயில்வே அணி 29-20, 29-20 என்ற கணக்கில் அம்பத்தூர் அணியையும் தோற்கடித்தன.

டி பிரிவு ஆட்டங்களில் மீடியா விஷன் ‘ஏ’ அணி 29-12, 29-14 என்ற கணக்கில் பிஎம்டி போர்ட்டோனோவா அணியையும், செயின்ட் ஜோசப் ‘ஏ’ அணி 29-17, 29-26 என்ற கணக்கில் கேரளா அணியையும் தோற்கடித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x