இந்திய பேட்ஸ்மென்களை ‘சிங்கிள்’ எடுக்க அனுமதிக்கவில்லை: மொர்டசா

இந்திய பேட்ஸ்மென்களை ‘சிங்கிள்’ எடுக்க அனுமதிக்கவில்லை: மொர்டசா
Updated on
1 min read

இந்திய அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தியது வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி என்று வங்கதேச கேப்டன் மஷ்ரபே மொர்டசா வர்ணித்துள்ளார்.

"இது எங்கள் அணியின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று. வீரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டனர். இதைத்தவிர பெரிதாக இந்தத் தொடரில் நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.

கடைசி பந்து வரை போராடி வெற்றிபெறுவதே குறிக்கோளாக இருந்தது. எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நாங்கள் சவாலாக மட்டுமல்ல போட்டியையே வெல்லலாம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

எங்கள் அணிக்கு அதிர்ஷ்டம் நிறைய இருந்தது. எங்களுக்குச் சாதகமாகவே அனைத்தும் நிகழ்ந்தது.

நான் எங்கள் பவுலர்களிடம் கூறியது என்னவெனில், பவுண்டரி அடிப்பதை பற்றி கவலை வேண்டாம், நாம் பீல்டர்களை நெருக்கமாகவே நிறுத்துவோம், ஆனால் அவர்களை சிங்கிள்கள் எடுக்க மட்டும் அனுமதிக்கக் கூடாது என்றேன், ஆனால் இந்த உத்தி எல்லா நாட்களிலும் வெற்றியடையாது என்பதையும் அறிவோம்.

வீரர்களிடத்தில் ஆக்ரோஷத்தை விதைத்ததில் பயிற்சியாளர் ஹதுரசிங்கேவின் பணி மகத்தானது" என்றார் மஷ்ரபே மொர்டசா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in