ரிக்‌ஷாவில் சென்ற போது விபத்து: லேசான காயங்களுடன் தப்பிய மஷ்ரபே மோர்டசா

ரிக்‌ஷாவில் சென்ற போது விபத்து: லேசான காயங்களுடன் தப்பிய மஷ்ரபே மோர்டசா
Updated on
1 min read

வங்கதேச ஒருநாள் அணி கேப்டன் மஷ்ரபே மோர்டசா கிரிக்கெட் பயிற்சிக்காக ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதில் லேசான காயங்களுடன் தப்பினார்.

இந்திய அணி வங்கதேசம் சென்று ஒரு டெஸ்ட், மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் வேகப்பந்து வீச்சாளரான மஷ்ரபே மோர்டசாவுக்கு இந்தக் காயம் ஏற்பட்டது.

பயிற்சிகாக மிர்பூர் ஷெரே பங்களா மைதானத்துக்கு ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்த போது ரிக்‌ஷா மீது பஸ் மோதியது இதனால் ரிக்‌ஷாவிலிருந்து அவர் கீழே விழுந்ததில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

காயம் பற்றி மஷ்ரபே மோர்டசா கூறும்போது, “எலும்பு முறிவுகள் எதுவும் இல்லை, ஆங்காங்கே சில சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒன்றும் ஆபத்தில்லை” என்றார்.

ஆனாலும், மோர்டசாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செக்-அப் செய்யப்போவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஒரு டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மோர்டசா தேர்வு செய்யப்படவில்லை. ஜூன் 18-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்குள் மோர்டசா தயாராகிவிடுவார் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in