மோகன் பகான் பயிற்சியாளருக்கு குவிகிறது பாராட்டு

மோகன் பகான் பயிற்சியாளருக்கு குவிகிறது பாராட்டு
Updated on
1 min read

பெங்களூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ-லீக் கால்பந்து போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் எப்.சி. அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்த மோகன் பகான் அணி 39 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனது. ஐ-லீக்கில் அந்த அணி வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுதான்.

தேசிய அளவிலான போட்டியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம், அதன் பயிற்சியாளர் சஞ்சய் சென்தான் என கால்பந்து வட்டாரங்கள் பாராட்டியுள்ளன.

மோகன் பகான் அணியின் பயிற்சியாளராக இருந்த சுபாஷ் பவுமிக், ஏஎப்சியின் ஏ லைசென்ஸ் இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சஞ்சய் சென் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பெரிய அளவில் பிரபலமில்லாதவரான சஞ்சய் சென், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை மோகன் பகான் அணிக்கு பெற்றுத் தந்துள்ளார்.

இது குறித்து கால்பந்து ஜாம்பவான் பி.கே.பானர்ஜி கூறுகையில், “மோகன் பகான் அணியை உச்சத்தை தொட வைத்துள்ளார் இந்திய பயிற்சியாளரான சஞ்சய் சென். அதை நினைத்து பெருமை கொள்கிறேன். இப்போதைய நாட்களில் இந்திய பயிற்சியாளர்களை குறைத்து மதிப்பிடுவதை ஒரு பழக்கமாக வைத்துள்ளனர். எதிர்காலத்தில் ஐ-லீக் போட்டிகளில் விளையாடும் அணிகளின் பயிற்சியாளர்களாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in