

இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று சங்கக்காரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான நடப்பு தொடரில் 3-வது டெஸ்ட் போட்டியில் சங்கக்காரா விளையாட மாட்டார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு மீண்டும் வந்து, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 2-வது டெஸ்ட் போட்டி முடிவில் ஓய்வு பெறுகிறார்.
இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சங்கக்காரா 227 இன்னிங்ஸ்களில் 12,271 ரன்களை 58.43 என்ற அதிகபட்ச சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் 38 சதங்கள் மற்றும் 52 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 319 ரன்கள். 179 கேட்ச்கள் 20 ஸ்டம்பிங்.
உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற சங்கக்காரா, 404 ஆட்டங்களில் 14,234 ரன்களை குவித்துள்ளார், சராசரி 41.98 ஆகும். இதில் 25 சதங்களையும், 93 அரைசதங்களையும் எடுத்துள்ளார் சங்கா. 402 கேட்ச் 99 ஸ்டம்பிங்.