Published : 06 Jun 2015 09:45 AM
Last Updated : 06 Jun 2015 09:45 AM

ஆடம் வோஜஸ் சதம்: ஆஸ்திரேலியா 318 ரன்கள் குவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 107 ஓவர்களில் 318 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆடம் வோஜஸ் தனது அறிமுகப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் குவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் ரொசாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங் ஸில் 53.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்ச மாக ஷாய் ஹோப் 36 ரன்களும், ஹோல்டர் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸ்தி ரேலிய தரப்பில் மிட்செல் ஜான்சன், ஹேஸில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தடுமாறிய ஆஸ்திரேலியா

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய அந்த அணி, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை இழந்தது. அவர் 90 பந்து களில் 1 பவுண்டரியுடன் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பின்னர் வந்த வாட்சன் (11), பிராட் ஹேடின் (8) ஆகியோர் அடுத்தடுத்து பிஷூ பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, 44 ஓவர்களில் 126 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா. எனினும் மறுமுனையில் நிதானமாக ஆடிய வோஜஸுக்கு பக்கபலமாக பின்வரிசை பேட்ஸ் மேன்கள் விளை யாட, ஆஸ்திரேலியா மெதுவாக சரிவிலிருந்து மீண்டது.

பின்வரிசை வீரர்கள் அபாரம்

ஒருபுறம் ஜான்சன் எச்சரிக்கையோடு விளையாட, மறுமுனையில் வோஜஸ் 118 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆஸ்திரேலியா 178 ரன்களை எட்டிய போது ஜான்சனை வீழ்த்தினார் பிஷூ. ஜான்சன் 59 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட் டுக்கு 52 ரன்கள் சேர்த்தது.

ஆனால் பின்னர் வந்த ஸ்டார்க் டக் அவுட்டாக, வோஜுஸடன் இணைந்தார் நாதன் லயன். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் 71-வது ஓவரில் 200 ரன் களை எட்டியது ஆஸ்திரேலியா. அந்த அணி 221 ரன்களை எட்டியபோது 9-வது விக்கெட்டாக லயன் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்தார்.

வோஜஸ் சதம்

இதையடுத்து கடைசி விக்கெட்டாக ஹேஸில்வுட் களம்புகுந்தார். இதனால் ஆஸ்திரேலியாவை விரைவாக ஆட்ட மிழக்கச் செய்துவிடலாம் என நினைத்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய ஹேஸில்வுட், மிக நேர்த்தியாக மேற் கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை எதிர்கொண்டார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய வோஜஸ் 187 பந்துகளில் சதமடித்தார். இதனால் 99-வது ஓவரில் 300 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. தொடர்ந்து சிறப்பாக ஆடி ரன் சேர்த்த ஹேஸில்வுட், சாமுவேல்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆக, ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் 107 ஓவர்களில் 318 ரன்களோடு முடி வுக்கு வந்தது.

வோஜஸ் 247 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேஸில்வுட் 87 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் தேவேந்திர பிஷூ 33 ஓவர்களில் 80 ரன் களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மே.இ.தீவுகள் தடுமாற்றம்

முதல் இன்னிங்ஸில் 170 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன் னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் பிரத்வெயிட் 15 ரன்களிலும், ஷாய் ஹோப் 2 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. டேரன் பிராவோ 3, டவ்ரிச் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ஸ்டெம்பிங் முறையில் வெளியேற்றியதன் மூலம் 200 பேரை ஆட்டமிழக்கச் செய்த 3-வது மேற்கிந்தியத் தீவுகள் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார் தினேஷ் ராம்தின். ஜெஃப் துஜான் (270), ரிட்லே ஜேக்கப் (219) ஆகியோர் மற்ற இருவர். சர்வதேச அளவில் மேற்கண்ட மைல்கல்லை எட்டிய 16-வது விக்கெட் கீப்பர் ராம்தின்.

ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி 4 விக்கெட்டுகள் மூலம் 192 ரன்கள் கிடைத்தன.

நேற்றைய ஆட்டத்தில் வோஜஸ்-ஹேலில்வுட்ஸ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடைசி விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியா ஏற்கெனவே எடுத்திருந்த ரன் சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது.

போட்டித் துளிகள்…

35 வயது வோஜஸும், சாதனையும்…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சதமடித்த ஆடம் வோஜஸ், ஆஸ்தி ரேலியாவை மிகப்பெரிய சரிவிலிருந்து மீட்டு பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்துள்ளார். ஆடம் வோஜஸின் தற்போதைய வயது 35 ஆண்டுகள், 242 நாட்களாகும். இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் அறிமுகப் போட்டியில் சதமடித்த மூத்த வீரர் என்ற பெருமை அவர் வசமாகியுள்ளது.

முன்ன தாக ஜிம்பாப்வேயின் டேவ் ஹக்டன் (35 வயது, 117 நாட்கள்), 1992-ல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான போது சதமடித்ததே சாதனையாக இருந்தது. அறிமுகப் போட்டியில் 5-வது வீரராக களமிறங்கி சதமடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையும் வோஜஸ் வசமாகியுள்ளது.

தேவேந்திர பிஷூ 50

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 80 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தேவேந்திர பிஷூ. டெஸ்ட் போட்டியில் இதுதான் அவருடைய சிறப்பான பந்துவீச்சு. மேற்கிந்தியத் தீவுகள் லெக் ஸ்பின்னர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சும் இதுதான்.

தனது 13-வது டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டிய 2-வது மேற் கிந்தியத் தீவுகள் லெக் ஸ்பின்னர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிஷூ.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x