இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச அணி அறிவிப்பு
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ரூபெல் ஹுசைன் காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் வங்கதேச அணியில் இடம்பிடித்துள்ளார். இதுதவிர சர்வதேச போட்டியில் இதுவரை விளையாடாதவரான லிட்டன் தாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார்.

கேப்டனும், விக்கெட் கீப்பருமான முஷ்பிகுர் ரஹிம் தனது கைவிரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அதனால் அவர் விஷயத்தில் அதிக சிரத்தை எடுக்க விரும்பாத வங்கதேச கிரிக்கெட் வாரியம், லிட்டன் தாஸை விக்கெட் கீப்பராக களமிறக்கும் முயற்சியில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-வங்கதேசம் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி ஃபதுல்லாவில் தொடங்குகிறது.

அணி விவரம்: முஷ்பிகுர் ரஹிம் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருள் கெய்ஸ், மோமினுல் ஹக், மகமதுல்லா, ஷகிப் அல்ஹசன், சவும்ய சர்க்கார், ஷுவகதா ஹோம், தைஜுல் இஸ்லாம், முகமது ஷாகித், ரூபெல் ஹுசைன், ஜுபைன் ஹுசைன், லிட்டன் தாஸ், அபுல் ஹசன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in