கனடா ஓபன்: இறுதிப்போட்டியில் ஜுவாலா- அஸ்வினி ஜோடி

கனடா ஓபன்: இறுதிப்போட்டியில் ஜுவாலா- அஸ்வினி ஜோடி
Updated on
1 min read

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஜப்பான் ஜோடியை எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜுவாலா கட்டா அஸ்வினி பொன்னப்பா ஜோடி நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் ஷிஹோ டனாக்கா- கோஹாரு யொனமோட்டோ ஜோடியை சந்தித்தது.

இப்போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்தி 21-17, 21-16 என்ற நேர் செட்களில் எளிதில் வென்றது. இப்போட்டி வெறும் அரைமணி நேரத்துக்குள் முடிவடைந்தது.

முதல் செட்டில் சற்று பின்னடைந்து இருந்த இந்திய ஜோடி, 4-4 என்ற கணக்கில் சமன் செய்தது. அதன் பின்னர் வெகுவேகமாக முன்னேறியது. 2-வது செட்டையும் எளிதில் கைப்பற்றிய இந்த ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஜுவாலா-அஸ்வினி ஜோடி, நெதர்லாந்தின் செலீனா பீக்- ஈப்ஜெ முஸ்கென்ஸ் ஜோடி யை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள வுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in