

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சென்னை சிட்டி எப்.சி. அணியும், தமிழ்நாடு கால்பந்து சங்க (டிஎப்ஏ) லெவன் அணியும் மோதுகின்றன.
முன்னதாக முதல் காலிறுதியில் சிவகங்கை மாவட்ட கால்பந்து கழக அணி 3-1 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி அணியைத் தோற்கடித்தது.
2-வது காலிறுதியில் சென்னை சிட்டி எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் கோவை மாவட்ட கால்பந்து கழக அணியைத் தோற்கடித்தது. சென்னை சிட்டி தரப்பில் ரொமாரியோ இரு கோல்களும், டேவிட் ஒரு கோலும் அடித்தனர்.
3-வது காலிறுதியில் டிஎப்ஏ லெவன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு காவல் துறை அணியை வென்றது. டிஎப்ஏ லெவன் அணி தரப்பில் ஜெபகுமார், பிரவேந்திரன், விஜி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
4-வது காலிறுதியில் சென்னை ஐசிஎஃப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் நீலகிரி இளைய பாரதம் அணியை தோற்கடித்தது. ஐசிஎஃப் தரப்பில் பிரெட்டி 2 கோலும், ஜெயக் குமார் ஒரு கோலும் அடித்தனர்.
பின்னர் நடைபெற்ற முதல் அரையிறுதியில் டிஎப்ஏ லெவன் அணி 5-1 என்ற கோல் கணக்கில் சிவகங்கை மாவட்ட கால்பந்து கழக அணியை வீழ்த்தியது. அந்த அணியின் அமிருதன் 4 கோல்கள் அடித்தார்.
மற்றொரு அரையிறுதியில் சென்னை சிட்டி எப்.சி. அணியும், சென்னை ஐசிஎஃப் அணியும் மோதின. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலடித் திருந்தன. இதையடுத்து வெற்றி யைத் தீர்மானிக்க டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் சமநிலை நீடிக்கவே, சடன் டெத் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் சென்னை சிட்டி எப்.சி. அணி 7-6 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.