ஹாக்கி வீராங்கனைகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கேப்டன் தோனி

ஹாக்கி வீராங்கனைகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கேப்டன் தோனி
Updated on
1 min read

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய ஜூனியர் மகளிர் வீராங்கனைகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தோனி தங்களை வந்து சந்தித்து வாழ்த்து தெரி வித்தது புதிய உத்வேகம் அளித்துள்ளாக வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 18 முதல் 26-ம் தேதி வரை நெதர் லாந்தில் 21 வயதிற்குட்பட்ட வீராங் கனைகளுக்கான ‘வால்வோ இண்டர்நேஷனல்’ மகளிர் ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது.

இதையடுத்து சீனாவில் 7-வது ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய வீராங்கனைகள் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வங்கதேசத் துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தோனி தனிப்பட்ட பயிற்சிக்காக அந்த மைதானத்துக்கு வந்தார். அப்போது ஹாக்கி வீராங்கனை களை சந்தித்த தோனி, போட்டி களில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

ஹாக்கி போட்டியில் மிகுந்த ஆர்வம் உள்ளவரான தோனி, ஹாக்கி இந்தியா லீக் போட்டி யில் ராஞ்சி ரே அணியின் உரிமை யாளர்களில் ஒருவராக உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in