கால்பந்து மைதானத்தில் ஸ்வஸ்திகா சின்னம்: மன்னிப்பு கோரியது குரேஷியா

கால்பந்து மைதானத்தில் ஸ்வஸ்திகா சின்னம்: மன்னிப்பு கோரியது குரேஷியா
Updated on
1 min read

குரேஷியாவின் ஸ்பிளிட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குரேஷியா-இத்தாலி அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் தகுதிச் சுற்றின்போது மைதானத்தில் ஹிட்லருடைய நாஜிப் படைகளின் சின்னமான ஸ்வஸ்திகா வரையப்பட்டி ருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் இனவெறி தொடர்புடைய ஸ்வஸ்திகா சின்னத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தின் போது இத்தாலி அணியினரின் தாக்குதல் ஆட்ட பகுதியில் (அட்டாக்கிங் சைடு) அந்த சின்னம் வரையப்பட்டு இருந்தது. ஸ்வஸ்திகா சின்னம் பெயின்ட்டால் வரையப்பட்டிருந்ததா அல்லது மைதானத்தில் இருந்த புற்களை வெட்டி அதுபோன்று வடிவமைத்திருந்தார்களா என்பது தெரியவில்லை.

ஸ்வஸ்திகா சின்னம் மைதானத்தில் வரையப் பட்டிருப்பதை அறிந்த போட்டி ஏற்பாட்டாளர்கள், 2-வது பாதி ஆட்டத்தின்போது அதை அழிக்க முயற்சித்தனர். எனினும் அதை முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த சம்பவத்துக்காக ஐரோப்பிய கால்பந்து சம்மேள னத்திடம் குரேஷியா மன்னிப்பு கோரியுள்ளது. எனினும் இந்த விவகாரத்தில் குரேஷியாவுக்கு தண்டனை வழங்கப்படலாம் என தெரிகிறது. குரேஷியா-இத்தாலி இடையிலான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கடந்த மாதம் நடைபெற்ற நார்வே-குரேஷியா இடையிலான ஆட்டத்தின்போது குரேஷிய ரசிகர்கள் இனவெறியைத் தூண்டு வகையில் நடந்து கொண்டனர். அதனால் வெள்ளிக்கிழமை நடை பெற்ற இத்தாலி-குரேஷியா இடையிலான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்னர் 2006-ல் லிவர்னோவில் இத்தாலி-குரேஷியா இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது மைதா னத்தில் இருந்த 200 குரேஷிய ரசிகர்கள் ஸ்வஸ்திகா சின்னத் தைப் போன்ற வடிவில் அமர்ந் திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in