Last Updated : 06 Jun, 2015 09:43 AM

 

Published : 06 Jun 2015 09:43 AM
Last Updated : 06 Jun 2015 09:43 AM

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: கனடாவில் இன்று தொடக்கம்

மகளிர் விளையாட்டுகளில் மிகப் பெரிய போட்டியான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடாவின் வான்கோவர் நகரில் இன்று தொடங்குகிறது.

சர்வதேச கால்பந்து சம்மேள னத்தில் (பிஃபா) நடைபெற்ற மிகப்பெரிய ஊழல், கால்பந்து உலகை உலுக்கியிருக்கும் நிலை யில் இந்தப் போட்டி தொடங்கு கிறது. 4 வாரங்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த முறையோடு ஒப்பிடும்போது இந்த முறை 8 அணிகள் கூடுதலாக பங்கேற்றுள்ளன. 24 அணிகளும் பிரிவுக்கு 4 அணிகள் வீதம் 6 பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

அதன்படி ஏ பிரிவில் கனடா, சீனா, நியூஸிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும், பி பிரிவில் ஜெர்மனி, ஐவரி கோஸ்ட், நார்வே, தாய்லாந்து ஆகிய அணி களும், சி பிரிவில் ஜப்பான், ஸ்விட் சர்லாந்து, கேமரூன், ஈகுவடார் ஆகிய அணிகளும் இடம்பெற் றுள்ளன.

டி பிரிவில் அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, ஸ்வீடன், நைஜீரியா ஆகிய அணிகளும், இ பிரிவில் பிரேசில், தென் கொரியா, ஸ்பெ யின், கோஸ்டா ரிகா ஆகிய அணி களும், எப் பிரிவில் பிரான்ஸ், இங்கிலாந்து, கொலம்பியா, மெக்ஸிகோ ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

குரூப் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளும், அதுதவிர 3-வது இடத்தைப் பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும்.

வான்கோவர், எட்மான்டன், வின்னிபெக், தலைநகர் ஒட்டாவா, மான்ட்ரியால், மாங்க்டன் ஆகிய 6 நகரங்களில் போட்டிகள் நடை பெறுகின்றன. இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந் துள்ளன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் கனடாவும், சீனாவும் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்தைச் சந்திக்கிறது நெதர்லாந்து. இந்த ஆட்டங்கள் இந்திய நேரப்படி முறையே மாலை 4 மற்றும் இரவு 7 மணிக்குத் தொடங்குகின்றன.

இந்த போட்டி தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கனடா கால்பந்து சங்க தலைவர் விக்டர் மான்டாக்லியானியிடம் போட்டி தொடர்பான கேள்விகளை விட, பிஃபா ஊழல் தொடர்பான கேள்விகளே அதிகமாக கேட்கப் பட்டன.

அப்போது பேசிய விக்டர், “நாளை (இன்று தொடங்கும் முதல் ஆட்டம் இருளில் இருந்து கால்பந்தை வெளிச் சத்துக்கு கொண்டு வரும் என நம்புகிறேன். கடந்த வாரம் சில மோசமான சம்பவங்கள் நடந்தன. அதையெல்லாம் தாண்டி இப்போது மகளிர் உலகக் கோப்பை தொடங்குவதை நேர்மறையான தாக பார்க்கிறேன்” என்றார்.

கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் மத்திய, வடக்கு அமெரிக்கா மற்றும் கரீபியத் தீவுக ளில் கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பான கன்காப் முன்னாள் தலைவர் ஜெப்ரி வெப்தான் எனக்கு உத்வேகம் அளிப்பவர் என விக்டர் கூறியிருந் தார். அது தொடர்பாகவும் அவரிடம் கேள்விக்கணைகள் தொடுக்கப் பட்டன. அதற்கு பதிலளித்த விக்டர், “அவர் இனவெறிக் கொள் கைக்கு எதிரானவர். அதன் மூலமாகத் தான் எனக்கு அவரைத் தெரியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x