என்.பி.ஏ.வில் விளையாட பஞ்சாப் இளைஞர் தேர்வு: முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்

என்.பி.ஏ.வில் விளையாட பஞ்சாப் இளைஞர் தேர்வு: முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்
Updated on
1 min read

அமெரிக்காவின் என்.பி.ஏ. தேசிய கூடைப்பந்து கழகத்தில் விளையாடுவதற்கான வரைவுப் பட்டியலில் பஞ்சாப் இளைஞர் சத்னம் சிங் இடம் பெற்றுள்ளார்.

டலாஸ் வேவரிக்ஸ் அணி அவரை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் புகழ்பெற்ற கூடைப்பந்து கழகத்தில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற முதல் இந்திய என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

19 வயதான சத்னம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். 7 அடி 2 அங்குல உயரம் கொண்ட சத்னம் சிங், என்.பி.ஏ.வில் விளையாடுவதற்கான வரைவுப் பட்டியலில் 52-வதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரைப்போல் மொத்தம் 60 இளைஞர்கள் என்.பி.ஏ.வில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த சீசனில் நடைபெறும் போட்டியில் சத்னம் சிங் விளைடாடுவார் எனத் தெரிகிறது.

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சிம் புல்லர் என்.பி.ஏ.வில் விளையாடும் முதல் இந்திய வம்சாவளி வீரராக இருந்தாலும் இந்தியாவிலேயே பிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் என்.பி.ஏ.வில் பங்கேற்கும் பெருமைக்கு உரித்தானவர் சத்னம் சிங்கே.

இந்நிலையில் தனக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு குறித்து பேட்டியளித்துள்ள சத்னம் சிங், "என்னால் இதை நம்பவே முடியவில்லை. என்.பி.ஏ.வில் நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இன்னும் நிறைய இந்திய இளைஞர்கள் தேர்வாக வாய்ப்பளிக்கும். இனி வருங்காலங்களில் இந்தியாவிலும் கூடைப்பந்து பிரபலமடையும். தற்சமயம் கிரிக்கெட்டுக்கு இருக்கும் ஒரு ஈர்ப்பு விரைவில் கூடைப்பந்து விளையாட்டுக்கும் ஏற்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in