பால் பாட்மிண்டன்: ஐசிஎப் சாம்பியன்

பால் பாட்மிண்டன்: ஐசிஎப் சாம்பியன்
Updated on
1 min read

சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடைபெற்ற 7-வது செயின்ட் ஜோசப் டிராபிக்கான அகில இந்திய பால் பாட்மிண்டன் போட்டியில் ஐசிஎப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கல்லூரி வளாகத்தில் 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஐசிஎப் அணி தனது சூப்பர் லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு சாம்பியன் ஆனது. செயின்ட் ஜோசப் ஏ அணி, தான் விளையாடிய 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி கண்டு 2-வது இடத்தைப் பிடித்தது. மீடியா விஷன் ஏ அணி 3-வது இடத்தையும், தெற்கு ரயில்வே பி அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முன்னாள் தடகள வீராங்கனை சைனி வில்சன் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஐசிஎப் அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். விழாவிற்கு செயின்ட் ஜோசப் குழும இயக்குநர் பாபு மனோகரன் தலைமை தாங்கினார்.

ஐசிஎப் அணிக்கு ரூ.40 ஆயிரமும், செயின்ட் ஜோசப் ஏ அணிக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடம்பிடித்த மீடியா விஷன் ஏ அணிக்கு ரூ.20 ஆயிரமும், 4-வது இடம்பிடித்த தெற்கு ரயில்வே பி அணிக்கு ரூ.10 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப் பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in