

சந்தர்பாலின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சாதித்தது என்னவெனில் சீரான முறையில் ரன்களை எடுத்திருந்ததே. 115 டெஸ்ட்களில் 28 சதங்கள் என்பது குறைந்தது 4 டெஸ்ட்களுக்கு சதம் என்ற அளவில் சீரான முறையில் அமைந்துள்ளது.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் எதிரணியினரால் வீழ்த்த முடியாமல் அதிக முறை நாட் அவுட்டாக இருந்திருக்கிறார் சந்தர்பால்.
மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் 278 இன்னிங்ஸ்களில் 49 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்து முதலிடம் வகிக்கிறார் சந்தர்பால்.
சந்தர்பாலின் நாட் அவுட் சாதனை வித்தியாசமானது ஏனெனில் அவர் சக பேட்ஸ்மென்களின் துணையில்லாமல் தனி நபராக ஒரு முனையில் போராடியது மிகவும் அதிகம்.
உதாரணத்துக்கு ஒரு தொடரை குறிப்பிட வேண்டுமென்றால், 2007 இங்கிலாந்து பயணத்தின் போது சந்தர்பாலின் ஸ்கோர் விவரம், 74, 50, 116 நாட் அவுட், 136 நாட் அவுட், பிறகு 70 மொத்த ஸ்கோர் 446 ரன்கள். சராசரி 148.66. ஆனாலும் மே.இ.தீவுகள் தொடரை 3-0 என்று இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ் 167 டெஸ்ட் போட்டிகளில் 255 இன்னின்ஸ்களில் 44 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
3-வதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் 156 டெஸ்ட் போட்டிகளில் 263 இன்னிங்ஸ்களில் 43 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
4-ம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ். இவர் 166 டெஸ்ட் போட்டிகளில் 279 இன்னிங்ஸ்களில் 40 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
5-ம் இடத்தில் இந்தியாவின் லஷ்மண் 134 டெஸ்ட்களில் 223 இன்னிங்ஸ்களில் 33 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
6-ம் இடத்தில் சச்சின் டெண்டுல்கர். இவர் 200 டெஸ்ட் போட்டிகளில் 329 இன்னிங்ஸ்களில் 33 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
7-ம் இடத்தில் ராகுல் திராவிட். இவர் 164 டெஸ்ட்களில் 286 இன்னிங்ஸ்களில் 32 முறை நாட் அவுட்.
8-ம் இடத்தில் ரிக்கி பாண்டிங். இவர் 168 டெஸ்களில் 286 இன்னிங்ஸ்களில் 29 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார்.
9-ம் இடத்தில் இங்கிலாந்து இடது கை பேட்ஸ்மென் கிரகாம் தோர்ப் 100 டெஸ்ட், 178 இன்னிங்ஸ்களில் 28 முறை நாட் அவுட்.
10-ம் இடத்தில் மே.இ.தீவுகளின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 116 போட்டிகளில் 201 இன்னிங்ஸ்களில் 25 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார்.
இன்னும் நிறைய முன்வரிசை வீரர்கள் நாட் அவுட்டாக திகழ்ந்திருந்தாலும் சந்தர்பால் இதுவரை முதலிடம் வகித்து வருகிறார். அவரது சராசரி 51.79 ஆக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.