பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர்: பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி தோல்வி

பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர்: பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி தோல்வி
Updated on
1 min read

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்ஸர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறியது.

இந்த ஜோடி ஸ்லோவேனியாவின் காதரினா ஸ்ரெபோன்டின்- ருமேனியாவின் ஹோரியா டெக்காவ் ஜோடியுடன் மோதியது. இதில், முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் பயஸ் ஜோடி கைப்பற்றியது. ஆனால், அடுத்த செட்டை 3-6 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தது. டைபிரேக்கர் வரை சென்ற 3-வது செட்டை பயஸ் ஜோடி 6-10 என்ற கணக்கில் இழந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in