உலகக் கோப்பையில் ஆரோனை சேர்க்காததால் மெக்ராத் ஏமாற்றம்

உலகக் கோப்பையில் ஆரோனை சேர்க்காததால் மெக்ராத் ஏமாற்றம்
Updated on
1 min read

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் சேர்க்கப்படாதது ஏமாற்றமளித்தது என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

வருண் ஆரோனின் வேகப்பந்து வீச்சால் கவரப்பட்டவரான மெக்ராத் மேலும் கூறியதாவது: உலகக் கோப்பையில் வருண் ஆரோன் சேர்க்கப்படாதது கொஞ்சம் ஏமாற்றமளித்தது. அவர் மிகவேகமாக பந்துவீசுவதோடு, ஸ்விங் பந்துகளை மிக அற்புதமாக வீசுகிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலம் வலம் வருவார் என நினைக்கிறேன்.

வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோர் 150 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக பந்துவீசுவதால் அவர் கள் இருவரும் எப்போதும் அணி யில் இருக்க வேண்டும். தொடர்ச்சி யாக வேகமாக பந்துவீசும்போது எதிரணிக்கு இழப்பை ஏற்படுத்த முடியும். உலகக் கோப்பையில் யாதவ் மிகச்சிறப்பாக பந்துவீசி யதைப் போன்று தெரிந்தது.

நான் ஆரம்பத்தில் ஆரோனுக்கும், யாதவுக்கும் பயிற்சியளித்த போது, அவர்களின் பந்துவீச்சில் துல்லியம் இல்லாமல் இருந்தது. அப்போது நான் அவர்களை வேகத்தைக் குறைக்க சொல்லவில்லை. மாறாக வலைப் பயிற்சியில் தீவிரம் காட்டுமாறு கூறினேன். பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டோடு பந்துவீசுவதற்காக வேகத்தைக் குறைத்து வீசுவதைப் பார்க்க நான் விரும்புவதில்லை. கட்டுப் பாட்டோடு பந்துவீசுவது அவசியம். அப்படி வீசினால்தான் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களை வீழ்த்த முடியும்“ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in