அகில இந்திய வாலிபால்: இறுதிச்சுற்றில் எஸ்.ஆர்.எம்., ஐ.ஓ.பி.

அகில இந்திய வாலிபால்: இறுதிச்சுற்றில் எஸ்.ஆர்.எம்., ஐ.ஓ.பி.
Updated on
1 min read

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பைக்கான அகில இந்திய வாலிபால் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், ஐ.ஓ.பி. அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் பிரிவு முதல் அரையிறுதியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 3- 1 என்ற செட் கணக்கில் கேரள மின்வாரிய அணியை தோற் கடித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் சென்னை ஐ.ஓ.பி. அணியும், கேரள போலீஸ் அணியும் மோதின. இதில் ஐ.ஓ.பி. அணி 3-0 என்ற செட் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

மகளிர் பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே அணிகள் மோதின. இதில் மத்திய ரயில்வே அணி 3- 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

மகளிர் பிரிவை பொறுத்தவரை புள்ளிகள் அடிப்படையில் மும்பை மத்திய ரயில்வே அணியும், கேரள போலீஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in