Last Updated : 23 Jun, 2015 09:39 AM

 

Published : 23 Jun 2015 09:39 AM
Last Updated : 23 Jun 2015 09:39 AM

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது பிசிசிஐ

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக் கெட் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று திடீரென ரத்து செய்தது.

பிசிசிஐ மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் சேனல் இடையே ஒளிபரப்பு தொடர் பான பிரச்சினை தீர்க்கப்படாத காரணத்தால் போட்டி ரத்தான தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா இழந்துள்ள நிலை யில் பிசிசிஐ எடுத்துள்ள இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று ஜூலை 10-ம் தேதி முதல் 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இரு 20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்பதும் இப்போட்டித் தொடர் ரத்து செய்யப்பட முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருவதால் சோர்வடைந்து போட்டி களில் சரியாக விளையாட முடிய வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சமீபகாலத்தில் தொடர்ந்து கிரிக்கெட் போட்டி நடத் தப்பட்டு வருவது கிரிக்கெட் தொடர் பாக ஒருவித சலிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதுதவிர, இந்திய அணி இப்போது வங்கதேசத்திடம் அடைந் துள்ள தோல்வியும் ரசிகர்கள் மத்தி யில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

மேலும் இத்தொடர் தோல்விகள் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை குறைத்துவிடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களே பிசிசிஐ-யின் முடிவில் எதிரொலித்துள்ளது.

இந்த போட்டி ரத்து செய்யப் பட்டுள்ளது தொடர்பாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x