

செயின்ட் ஜோசப் 5-வது இண்டர்நேஷனல் ஃபிடே ரேட்டிங் செஸ் போட்டி ஜூலை 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.2 லட்சம் ஆகும். இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு டிராபியுடன் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படு கிறது.
1,400 அல்லது அதற்கு மேற்பட்ட ஃபிடே ரேட்டிங் புள்ளிகளை வைத்திருப்பவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. 1,400 ஃபிடே ரேட்டிங் புள்ளிகளுக்கு குறைவாக இருப்பவர்கள் 800 ரூபாயும், ரேட்டிங்கில் இல்லாதவர்கள் 1,200 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 26. நுழைவுக் கட்டணத்தை ஆன்-லைன் மூலமாகவும் (>www.paychessentry.com) செலுத்தலாம். போட்டியில் பங்கேற்க உடனடி அனுமதி கிடையாது.
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும். வெளியூரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். இது தொடர்பான மேலும் விவரங்களை >www.tamilchess.com மற்றும் >www.aicf.in என்ற இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ரவிச்சந்திரன் என்பவரை (94442 10914 மற்றும் 98405 83157) தொடர்பு கொள்ளலாம். mountchess@rediffmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.