

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஃபதுல்லாவில் நாளை தொடங்குகிறது. இதில் விளையாடவுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் நேற்று வங்கதேசம் சென்றடைந்தது. டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தவர்களில் கே.எல்.ராகுல் மட்டும் காய்ச்சல் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப் படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரரான ஹர்பஜன் சிங், கடைசியாக 2013 மார்ச்சில் சர்வதேச போட்டியில் விளையாடினார். அதன்பிறகு இப்போதுதான் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளார். விராட் கோலி முழு நேர கேப்டனாக செயல்படவுள்ள முதல் தொடர் இதுதான்.
இந்திய அணி வங்கதேசத்துடன் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இந்தியா 6 முறை வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த 3 போட்டிகளும் டாக்காவில் நடைபெறுகின்றன.
விராட் கோலி (கேப்டன்), வருண் ஆரோன், அஸ்வின், ஷிகர் தவன், ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார், சேதேஷ்வர் புஜாரா, விருத்திமான் சாஹா, இஷாந்த் சர்மா, கரண் சர்மா, ரோஹித் சர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ்.
அணி விவரம்:
வங்கதேசம் செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்துக்கு நேற்று வந்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி, முரளி விஜய், ஹர்பஜன் சிங், ஷிகர் தவன்.