

வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலும் இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி இருப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் இயக்குனராக இருந்த ரவி சாஸ்திரி, வங்கதேச தொடரிலும் அதே பதவியில் தொடர்கிறார்.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வங்கதே சத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக் கப்பட்டுள்ளார் என்பதை தெரி வித்துக் கொள்கிறோம்.
சஞ்சய் பாங்கர் (பேட்டிங்), அருண் (பவுலிங்) ஸ்ரீதர் (பீல்டிங்) ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ரவி சாஸ்திரிக்கு உதவியாக இருப்பார்கள். பிஸ்வார்ப் தேய் (நிர்வாகம்), ரிஷிகேஷ் உபாத் யாயா (சுற்றுப் பயண விவகாரம்) ஆகியோர் மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அணி வரும் 7-ம் தேதி வங்கதேசம் புறப்பட்டுச் செல்கிறது. அந்நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
கோலி புகழாரம்
வங்கதேச தொடருக்கு ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக இருப்பார் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ள இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி, “ரவி சாஸ்திரி எந்த விஷயத்திலும் பொறுப்பேற்க தயங்கமாட்டார். அவர் பின்னடைவிலிருந்தாலும் அதிலிருந்து மீண்டு முன்னோக்கி செல்லக்கூடியவர். அவருடைய சிந்தனையில் இரட்டைப் பாதை இருக்காது. அவர் ஒரு வியப் பான மனிதர்.
இன்று அவரைச் சுற்றி இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். அவர் இளம் வீரர் களுக்கு நம்பிக்கையைக் கொடுத் திருக்கிறார். அதனால் அவர் பேசும்போது அனைவரும் wஅவருக்கு மரியாதை அளிக்கி றார்கள். அவர் உணர்வுபூர்வமான மனிதர். அதனால் அவரால் அனை வருக்கும் நம்பிக்கையையும், உறுதியையும் கொடுக்க முடிகிறது” என்றார்.