2-வது முறையாக தென் ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரராக டிவில்லியர்ஸ் தேர்வு

2-வது முறையாக தென் ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரராக டிவில்லியர்ஸ் தேர்வு
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்கா அணியின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக நூதன கிரிக்கெட் ஷாட் மன்னன் ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து 2-ம் ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும், வீரர்களின் வீரர் விருதும், ரசிகர்களின் சிறந்த வீரர் விருதும் டிவில்லியர்ஸுக்கு கிடைத்துள்ளது.

2014-ம் ஆண்டு தொடங்கியது முதல் 28 ஒருநாள் போட்டிகளில் 1,610 ரன்களை எடுத்துள்ள டிவில்லியர்ஸின் சராசரி 80.50. இதில் 4 சதங்களை எடுத்துள்ளார்.

2015-ம் ஆண்டு டிவில்லியர்ஸுக்கு சாதனை ஆண்டாகும், ஜொஹான்னஸ்பர்கில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 31 பந்துகளில் சதம் அடித்து ஒருநாள் உலக சாதனை புரிந்தார்.

பிறகு உலகக் கோப்பையிலும் சிக்கிய மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக சிட்னியில் 64 பந்துகளில் 150 ரன்கள் விளாசி 150 ரன்களுக்கான உலக சாதனையையும் நிகழ்த்தினார்.

இதே காலக்கட்டத்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் 779 ரன்களை 55.64 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஹஷிம் ஆம்லா தேர்வு செய்யப்பட்டார். ஜனவரி 2014 முதல் ஆம்லாவின் டெஸ்ட் சராசரி 66.75 என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் சமீபத்தில் அறிமுகமான ரைலி ரூசோவ் 20 போட்டிகளில் 626 ரன்களுடன் சிறந்த அறிமுக வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றார்.

சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக மோர்னி வான் விக் தேர்வு செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in