

மாநில அளவிலான வாட்டர் போலோ போட்டியில் சென்னை மாநகராட்சி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
நெய்வேலியில் ஜூன் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன.
இதில் வாட்டர் போலோ போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சென்னை மாநகராட்சி அணியில் இடம்பெற்றிருந்த வர்ஷா, எக்சா, சினேகா, ஹரீஷ், முகேஷ் ஆகியோர் அடுத்த மாதம் புனேவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.
2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீச்சல் அணியில் மாநகராட்சி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் என பலர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தனிப்பட்ட முறையில் தேசிய அளவில் பல பதக்கங்கள் வென்றிருந்தாலும், வாட்டர் போலோ என்ற குழு விளையாட்டில் வெல்வது இதுவே முதல் முறை.