Last Updated : 30 May, 2015 09:54 AM

 

Published : 30 May 2015 09:54 AM
Last Updated : 30 May 2015 09:54 AM

பாட்மிண்டன் தரவரிசை பி.வி.சிந்து சறுக்கல்

நேற்று வெளியான புதிய சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரு இடங்களை இழந்து 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டி யில் இரு முறை வெண்கலப் பதக்கம் வென்றவரான சிந்து, சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் முதல் சுற்றோடு வெளியேறியதன் காரணமாக தரவரிசையில் சறுக்கலை சந்தித்துள்ளார். எனினும் மற்றொரு இந்திய வீராங்க னையான சாய்னா நெவால் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ஆடவர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் காந்த், ஆஸ்திரேலிய ஓபனில் 2-வது சுற்றோடு வெளியேறி னாலும் அது அவருடைய தரவரிசையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர் தொடர்ந்து 4-வது இடத்திலேயே உள்ளார். இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தலா ஓர் இடம் முன்னேற்றம் கண்டு முறையே 12 மற்றும் 14-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

மகளிர் இரட்டையர் தரவரிசை யில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஆரம்பத்திலேயே வெளியே றியபோதும், தரவரிசையில் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 18-வது இடத்தைப் பிடித்துள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x