Published : 01 May 2015 11:00 AM
Last Updated : 01 May 2015 11:00 AM

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகை யாளர் சங்கம் (டிஎன்எஸ்ஜேஏ), ஜிவிஎஸ்பிஎல் ஆகியவற்றின் சார்பில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கர னுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

டிஎன்எஸ்ஜேஏ-ஜிவிஎஸ்பிஎல் சார்பில் விளையாட்டு வீரர்களுக் கான விருது வழங்கும் விழா சென்னை தியாகராய நகரில் நடை பெற்றது. இதில், பாஸ்கரன் ஹாக்கி விளையாட்டுக்கு செய்த பங்களிப் புக்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங் கப்பட்டது. 1980-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாஸ்கரன் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதைப் பெற்ற பின்னர் ஏற்புரை நிகழ்த்திய பாஸ்கரன், “நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களை அடையாளம் கண்டு வழங்கப்படும் தலைசிறந்த விருதுகளுள் இதுவும் ஒன்று. இதற்கு முன்னரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டி ருக்கிறேன். ஆனால் இந்த முறை வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றிருக்கிறேன். விருது வென்ற மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக் கான விருதும், படகுப் போட்டி வீராங்கனைகளான வர்ஷா கவுதம், ஐஸ்வர்யா நெடுஞ்செழியன் ஆகி யோருக்கு சிறந்த வீராங்கனைக் கான விருதும் வழங்கப்பட்டன.

வாழ்நாள் சாதனையாளர் விருது (பத்திரிகை துறை) ராயன் அமல்ராஜுக்கும், சிறந்த பயிற்சியாளருக்கான விருது வாலிபால் பயிற்சியாளர் தட்சிணா மூர்த்திக்கும் வழங்கப்பட்டன. தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வாலிபால் அணிக்கு தட்சிணாமூர்த்தி கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் சிறந்த அணியாக தமிழக கிரிக்கெட் அணி தேர்வு செய்யப்பட்டது. தமிழக அணி, ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகேயன் முரளி, ஜி.கே.மோனிஷா (இருவரும் செஸ்) ஆகியோருக்கு இளம் சாதனையாளர் விருதும், அரவிந்த் சிதம்பரம் (செஸ்), அபினவ் முகுந்த் (கிரிக்கெட்), சுகேத் சீனிவாஸ் (யோகா), அமல்ராஜ், சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), பிரபாகரன் (வாலிபால்) ஆகியோருக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

இதுதவிர எஸ்.நந்தினி (தடகளம்), ஜி.சந்திரமவுலீஸ்வர் (பாட்மிண்டன்), சி.லட்சுமி (செஸ்), எஸ்.பி.கீர்த்தனா (கிரிக்கெட்), ஜி.வி.ஹரிஹரன் (கால்பந்து), பி.மிதிலேஷ் (துப்பாக்கி சுடுதல்), பி.எம்.அபிஷிக்தா (நீச்சல்), என்.வித்யா (டேபிள் டென்னிஸ்), எஸ்.பிரசாந்த், ஆர். அங்கமுத்து (இருவரும் வாலிபால்) ஆகியோருக்கு தலா ரூ.30 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டன.

இந்த விழாவில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 வீரரான நரேன் கார்த்திகேயன், முன்னாள் கால்பந்து வீரர் அருமை நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x