

20 ஓவர் போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்காக பல வீரர்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவதாக மேற்கிந்தியத்தீவுகளை சேர்ந்த முன்னாள் வீரர் சர் கேரி சோபர்ஸ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
சோபர்ஸ், உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டரில் ஒருவர், கிரிக்கெட் உலகில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை தொடர்ந்து விளாசி முதல் வீரரும் கேரி சோபர்ஸ் தான்.
இப்போது 78 வயதாகும் அவர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்பாக இணையதளத்தில் மேலும் கூறியுள்ளது:
இப்போதைய சூழ்நிலையில் டெஸ்ட் போட்டி என்பது கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. அதுவும் 20 ஓவர் போட்டிகள் வந்த பிறகு, பல வீரர்கள் விரைவாகவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்துகின்றனர்.
அதே நேரத்தில் 20 ஓவர் கிரிக்கெட் நல்லதா அல்லது கெட்டதா என்று எனக்கு தெரியவில்லை. அதுவும் ஒரு வகையில் காலத்துக்கு ஏற்ற போட்டி போல தோன்றுகிறது. எனினும் கிரிக்கெட்டை பொறுத்தவரை டெஸ்ட் போட்டி என்பது மிகவும் முக்கியமானவை. அவற்றை கைவிட்டுவிடக் கூடாது என்று சோபர்ஸ் கூறியுள்ளார்.