Last Updated : 07 May, 2015 09:55 AM

 

Published : 07 May 2015 09:55 AM
Last Updated : 07 May 2015 09:55 AM

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்த தவறியதால் தோல்வியடைந்தோம்: யுவராஜ் சிங் ஆதங்கம்

மும்பை இண்டியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதன்பிறகு விக்கெட் வீழ்த்த தவறியதால் நாங்கள் தோல்வியடைந்தோம் என்று டெல்லி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் தெரிவித்தார்.

மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. யுவராஜ் சிங் அதிகபட்சமாக 44 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய மும்பை அணி ஒரு கட்டத்தில் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ரோஹித் சர்மா (46), அம்பட்டி ராயுடு (49), போலார்ட் (26) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய யுவராஜ் சிங், “மும்பை அணியை ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் என்ற அளவுக்கு கட்டுப் படுத்திவிட்டோம். அதனால் அந்தப் போட்டியை நாங்கள் வென்றிருக்க வேண்டும். ஆனால் அதன்பிறகு எங்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. மழை பெய்த பிறகு பனி பொழிய தொடங்கியது. அதனால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது. பந்துகள் சுழலவில்லை. அது மும்பை அணிக்கு சாதகமாகிவிட்டது. அதேநேரத்தில் மும்பை அணி சிறப்பாக ஆடியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு ஆகியோரைப் பாராட்டிப் பேசிய யுவராஜ் சிங், “ரோஹித், ராயுடு இருவரும் சிறப்பாக விளையாடினர். ஆரம்பத்தில் ஆடுகளம் கொஞ்சம் பிடிப்பாக இருந்தது. ஆனால் பனி பொழிய ஆரம்பித்த பிறகு பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவதற்கு வசதியாக பேட்டுக்கு வந்தது பந்து.

மழை பெய்யாமல் இருந்திருந் தால், நாங்கள் நன்றாக ஆடியி ருப்போம். போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம். உண்மையை சொல்வதானால் கடும் நெருக்கடிக்கு (40-4) மத்தியிலும் மும்பை அணி சிறப்பாக விளையாடியது. ரோஹித்தும், ராயுடுவும் வெற்றியை நோக்கி அணியை இழுத்துச் சென்றனர்” என்றார்.

டெல்லி அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அதனால் அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அது தொடர் பாக யுவராஜ் சிங்கிடம் கேட்ட போது, நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி கடந்த முறை கடினமான கட்டத்தில் இருந்து மீண்டு வந்ததை சுட்டிக் காட்டி னார்.

அது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இன்னும் எங்களுக்கு 4 ஆட்டங்கள் உள்ளன. அது மிகவும் கடினமானதுதான். ஆனாலும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை கொல்கத்தா அணி 7 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாம்பியன் ஆனது. எனவே கிரிக்கெட்டில் அனைத்தும் சாத்தியம்தான்” என்றார்.

இந்த ஆட்டத்தில் அரை சதம டித்ததன் மூலம் உங்களை பற்றி விமர்சித்தவர்களின் வாயை அடைத்துவிட்டதாக நினைக்கிறீர் களா என்று கேட்டபோது, “விமர் சனங்களை படிப்பதற்கு எனக்கு நேரமில்லை. கிரிக்கெட் விளை யாடுவது எனது வேலை. விமர்சகர் களின் வேலை எழுதுவது.

என்னைப் பற்றி என்ன வந்தாலும், அதையெல்லாம் நான் வாசிப்பது இல்லை. தற்போதைய தருணத் தில் அதற்கு நேரமும் இல்லை. நான் எனது பணியை செய்து கொண்டிருக்கிறேன். செய்தி யாளர்களாகிய நீங்கள் உங்கள் வேலையை செய்து கொண்டி ருக்கிறீர்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x