Published : 01 May 2015 10:46 AM
Last Updated : 01 May 2015 10:46 AM

ஜப்பான் ஹாக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு

ஜப்பானுக்கு எதிரான ஹாக்கி தொடரில் விளையாடவுள்ள 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் வரும் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான உத்தேச இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 22-ம் தேதி முதல் நேற்று வரை டெல்லியில் நடைபெற்றது. அதன்முடிவில் இறுதி அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி இன்று புவனேசுவரத்துக்கு புறப்படு கிறது. வரும் ஜூன் மாதம் உலக ஹாக்கி லீக் அரையிறுதி நடை பெறவுள்ளதால், ஜப்பானுக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராகக் கருதப்படுகிறது.

சமீபத்தில் நடந்த சுல்தான் அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி, ஜப்பானுக்கு எதிரான தொடரை வெல்வதில் தீவிரமாக உள்ளது.

அணி தேர்வு குறித்துப் பேசிய பயிற்சியாளர் பால் வான் ஆஸ், “ஜப்பானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக்கை வீரர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஜப்பானுக்கு எதிரான இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு இந்திய அணி உள்ளது. அதற்காக ஆட்டத்தை சிறப்பாக தொடங்குவது, வேகமாக ஆடுவது, ஆரம்பத்திலேயே ஜப்பானுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுத்து வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்” என்றார்.

அணி விவரம்:

கோல் கீப்பர்: ஸ்ரீஜேஷ், ஹர்ஜோத் சிங்.

பின்களம்: குர்பஜ் சிங், ரூபிந்தர்பால் சிங், பைரேந்திர லகரா, கோதாஜித் சிங், வி.ஆர்.ரகுநாத், ஜேஸ்ஜித் சிங், குருமெயில் சிங், யுவராஜ் வால்மீகி, ஹர்மான்ப்ரீத் சிங்.

நடுகளம்: மன்ப்ரீத் சிங், தரம்வீர் சிங், சர்தார் சிங், எஸ்.கே.உத்தப்பா, சிங்லென்சனா சிங், பிரதீப் மோர்.

முன்களம்: எஸ்.வி.சுனில், ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், நிகின் திம்மையா, சத்பிர் சிங், லலித் உபாத்யாய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x