Published : 15 May 2015 04:28 PM
Last Updated : 15 May 2015 04:28 PM

வலைப்பயிற்சியில் தோனிக்கு பந்து வீசியதன் மூலம் கற்றுக் கொண்டேன்: டிவைன் பிராவோ

டி20, ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதி ஓவர்களை சிக்கனமாக வீச தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக சென்னை சூப்பர் கிங்ஸின் மேற்கிந்திய வீரர் டிவைன் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

"நான் எம்.எஸ்.தோனியுடன் வலைப்பயிற்சி மேற்கொள்கிறேன். வலையில் அவரது ஆக்ரோஷ பேட்டிங்கை கட்டுப்படுத்த முயற்சி செய்தேன். அவரைக் கட்டுப்படுத்த முடிகிறது என்றால், எந்த பேட்ஸ்மெனையும் என்னால் கட்டுப்படுத்த முடியும்" - என்றார் பிராவோ.

ஆனால், சில போட்டிகளாகவே தோனியினால் அவரது பழைய அதிரடி முறைகளைக் கடைபிடிக்க முடியவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது. அவர் மீது இத்தகைய விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் பிராவோ இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிராவோ 13 போட்டிகளில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: "அடிப்படையில் நான் பேட்ஸ்மென் எப்பேர்பட்டவர் என்பதைப் பார்ப்பேன். அவர் முன் கூட்டியே நகர்ந்து ஆடுபவர் என்றால் நான் பந்துகளை மாற்றி வீசுவேன், அவர் நகராமல் இருந்தால் யார்க்கர்கள் வீசுவேன். பேட்ஸ்மென் என்ன நினைக்கிறார் என்பதை அவருக்கு முன்னதாகவே நான் கணித்து விடுவேன்.

நாங்கள் (மே.இ.தீவு வீரர்கள்) எப்போதும் பொழுதுபோக்கு விரும்பிகள், இந்தியர்கள் போலவே கொண்டாட்ட நாட்டம் உடையவர்கள், இதனால்தான் இந்திய ரசிகர்களிடையே மேற்கிந்திய வீரர்கள் வெகுசுலபமாக ஒன்றி விடுகின்றனர்” என்றார் பிராவோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x