Published : 20 May 2015 05:14 PM
Last Updated : 20 May 2015 05:14 PM

ஓல்டு இஸ் கோல்டு : ஹர்பஜன், நெஹ்ரா குறித்து ட்விட்டரில் சேவாக் நெகிழ்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது. இந்த ஆட்டம் குறித்து வீரர்கள், வர்ணனையாளர்கள் ட்விட்டரில் கருத்து மழை பொழிந்துள்ளனர்.

ஹர்பஜன் சிங் ஓரே ஓவரில் ரெய்னா, தோனி ஆகியோரை வீழ்த்தியது சென்னை வெற்றிப்பாதையை அடைத்தது. இது குறித்து சேவாக் புகழ்ந்ததோடு, நெஹ்ராவின் பந்து வீச்சையும் புகழ்ந்துள்ளார்.

சேவாக் தன் ட்விட்டர் பக்கத்தில் "வாவ்! இன்னொரு ஓல்டு இஸ் கோடு சர்தார் ஜீ" என்று ட்வீட் செய்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தை சேவாக் நெருக்கமாக பார்த்திருக்கிறார் என்பதை தனது இன்னொரு ட்வீட்டில் தெரியப்படுத்தினார், “தனது கடைசி ஓவரில் 2 ரன்களையே கொடுத்த நெஹ்ரா ஜீ- என்ன ஒரு பந்துவீச்சு, ஓல்டு இஸ் கோல்டு..” என்றும் “சபாஷ் நெஹ்ரா ஜீ” என்றும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

மேலும், "நம் சர்தார்ஜீ என்ன மாதிரி வீசிவிட்டார்...! 3-வது விக்கெட்டை வீழ்த்தத் தவறினார்" என்று சேவாக் ஓல்டு இஸ் கோல்டு பார்வையை ட்விட்டரில் பதிவிட்டார்.

முரளி கார்த்திக்: மும்பை இண்டியன்ஸுக்கு என்ன மாதிரியான திருப்பம் ஏற்பட்டுள்ளது!! முதல் 4 போட்டிகளில் தோல்வி பிறகு தற்போது வெல்லப்பட வேண்டிய அணி என்ற முன்னேற்றம், அனைத்தும் சுய-நம்பிக்கையால் விளைந்தது. என்று கூறியுள்ளார்.

டு பிளெஸ்ஸிக்கு கேட்ச் விட்ட மலிங்காவை குறிப்பிட்டு மொகமது கைஃப் தனது பதிவில், “ரிக்கி பாண்டிங், ஜாண்ட்டி ரோட்ஸ் அங்கே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது மலிங்கா ஒளிந்து கொள்ள இடம் தேடுவார்” என்று மெலிதான கேலி தொனியில் ட்வீட் செய்துள்ளார்.

தோனி மீதான விமர்சன ட்வீட்கள்:

முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா: அஸ்வின், நெஹ்ரா ஆகியோருக்கு டாப் 6-இல் தலா 3 ஓவர்கள் கொடுத்த தோனியின் முடிவு ஆச்சரியமளிக்கிறது. தோனி அவரைப்போல கேப்டன்சி செய்யாத தருணம்...

ஷேன் வார்ன்: தோனியின் கேப்டன்சி எனக்கு ஆச்சரியத்தை அளித்தது என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஜடேஜாவுக்கு ஏன் 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது? இதைத் தவிர ஏன் பல விசித்திரமான முடிவுகளும்...?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x