கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்?

கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்?
Updated on
2 min read

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் கொல்கத்தா அணி 15 புள்ளிகளோடு புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. உள்ளூர் மைதானத்தில் தொடர்ச்சி யாக ஆதிக்கம் செலுத்தி வரும் கொல்கத்தா அணிக்கு இன்றைய ஆட்டம் அங்கு ஆடும் கடைசி லீக் ஆட்டம் என்பதால் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைக்க முயற்சிக்கும்.

முந்தைய ஆட்டங்களில் டெல்லி, சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணி களை வீழ்த்தியிருக்கும் கொல்கத்தா, தொடர் தோல்வியால் துவண்டிருக்கும் பஞ்சாப்பை பந்தாடும் என எதிர்பார்க்கப் படுகிறது. பெங்களூருக்கு எதிராக 138 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட பஞ்சாப் அணி, கொல்கத்தாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.

இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 8-ல் தோல்வி கண்டு கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப், கொல்கத் தாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவது மிகவும் கடின மாகும்.

உள்ளூர் மைதானத்தில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே கொல்கத்தா அணி வலுவாக உள்ளது. கேப்டன் கம்பீர், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, ஆன்ட்ரே ரஸல், யூசுப் பதான், சூர்ய குமார் யாதவ் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் கொல்கத்தாவுக்கு பலம் சேர்க் கின்றனர். ஆன்ட்ரே ரஸல், ஜோகன் போத்தா ஆகியோர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வருகின்றனர்.

வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ரஸல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் சுனில் நரேன் அணிக்குத் திரும்பிய பிறகு மிகவும் பலம் பெற்றுள்ளது. சுனில் நரேன், ஜோஹன் போத்தா, பியூஷ் சாவ்லா, பிராட் ஹாக் என 4 பேர் கொண்ட சுழற்பந்து வீச்சாளர்கள் கூட்டணி, பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

பஞ்சாப் அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் பெரும் தடுமாற்றத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வீரர்களை மாற்றிப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. முரளி விஜய், மனன் வோரா, கேப்டன் பெய்லி, மேக்ஸ்வெல், மில்லர் என வலுவான பேட்ஸ் மேன்கள் இருந்தபோதிலும் இதுவரை யாரும் சரியாக விளையாடவில்லை.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் அனுரீத் சிங் மட்டும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஜான்சன், சந்தீப் சர்மா, அக் ஷர் படேல் உள்ளிட்ட அனைவருடைய பந்துவீச்சையும் எதிரணிகள் பந்தாடிவிட்டன. பலம் வாய்ந்த கொல்கத்தாவை, பஞ்சாப் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெல்லி-ஹைதராபாத் மோதல்

ராய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில் ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் தும் மோதுகின்றன. இதுவரை இவ்விரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அதில் சன்ரை ஸர்ஸ் 4 முறையும், டெல்லி ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளன.

போட்டி நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in